Wednesday, July 25, 2007

நதிமூலம்......







"போரும்
கருக்கொண்டு,
தேசம்
நெருப்புண்டு
குருதி கலந்த
அருவிகளும்
கரும் சாம்பல்
சிதறிய
தெருக்க்ளும்
உருக்கொண்ட
பொழுதுகளில்....

அம்மா பொட்டிழந்து,
அக்கா கற்பிழந்து,
அண்ணா காலிழந்து,
தாய் வயிற்றில்
கருக்கொண்ட
உருவினை
வெறுப்புடன்
எதிர்பார்த்திருந்த
பொழுதுகளில்....

பச்சைப்
பாணைக்கோதி,
மண் கலந்த
பருப்பை விட்டு
பட்டும் படாததுமாய்
வாய்களில்
திணித்திருந்த
பொழுதுகளில்....

பச்சை தண்ணீர்க்காய்
பகல் முழுதும்
வரிசை செய்து,
பொழுது முடியும் வேளை
தாகமடக்கிய
பொழுதுகளில்.....

குவித்த மண்ணில்
தலை வைத்து
குறையாய் உறங்கிய
பொழுதுகளில்.....

விடியலில்
சேவல்களுக்கு பதிலாக
காவலரின்
கணைகள் முழங்கிய
பொழுதுகளில்.....

அந்தரங்கம்
அற்றுப் போன
ஒரு அகதிமுகாமில்...."

எப்படிச் சொல்வது
இத்தனை நீளமாய்....?
தலைநகரில்,
அடையாள அட்டையை
புரட்டியபடி
ஒற்றை வார்த்தையில்
கேட்கிறாய் சோதரா...,
"பிறந்தது...........?"

4 comments:

Anonymous said...

தமிழனின் தலைவிதி உண்மையாக வர்ணித்துள்ளீர்கள்.அனுபவப்பட்டால் மாத்திரமே இப்படியொரு கவிதையினை எழுதமுடியும். நன்று தொடரட்டும் உங்கள் வரிகள்.....

Unknown said...
This comment has been removed by the author.
Unknown said...

i remember, u said once uponday,poem must be read by others themself,not your self.. you do it now .so happy......continue

வேல் சாரங்கன் said...

நன்றி வாசகி....

உங்கள் தரமான விமர்சனங்களை தொடர்ந்தும் எதிர் பார்க்கிறேன்...!

Thanks dear Somasuntharam....(son of...)