Sunday, July 22, 2007

காலம்.....


நிலவின்
கறைகளைக் காட்டி
குழந்தை கேட்டது....
'அது என்னம்மா?'
'பெரிய ஒரு தாச்சியிலை
பாட்டி வடை சுடுறா'

குழந்தை வளர்ந்து
குழந்தை பெற்றது...
'அது என்ன பாட்டி?'
குழந்தை
நம்புவதாய் இல்லை;
வடை சுடும் கதைகளை...
"அது
ஷெல் விழுந்த பள்ளமடா
செல்லப் பேரா...!"

தலைமுறை கடந்தது...
அதே கேள்வி;
அதே பதில்...!

குழந்தை
திருப்பிக் கேட்டது;
"மல்ரி பரலா, ஆட்லரியா...?"!!

விக்கிச் செத்தாள்
சோறூட்டிய கிழவி!

4 comments:

Anonymous said...

நல்ல வரிகள்.இன்றைய குழந்தைகள் நிச்சயம் கேட்கும் இதேகேள்வியினை ஆனால் பாட்டிமார் அப்படிச்சொன்னாலும் அதனை நம்பாதுகள் குழந்தைகள் கண்டியளோ!
ஆனால் குழந்தைகளின் மனதில் நிச்சயம் யுத்தத்தின் வடுக்கள் சிறிய அளவிலேனும் காணப்படும் என்பதில் ஐயம் இல்லை.
சாரங்கன் இன்னும் எழுதுங்கள் உங்கள் அடுத்த கவிதைக்கும் எனது விமர்சனம் தொடரும்!

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

மிகவும் நல்லாய்ச் சிந்திக்கிறீர்கள்.
நன்று

வேல் சாரங்கன் said...

நன்றி வாசகி....

வேல் சாரங்கன் said...

உங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி குருபரன் அண்ணா..