Wednesday, March 5, 2008

இதய பாசை...


இதயங்களால்
பேசப்படுவதான பாசை,
காற்றலைகளின்
ஒவ்வோர் அணுவிலும்
கலந்து பரவுகிறது.......

'இழை மணிகளின் தாய்' என
இன்றைய விஞ்ஞானம்
ஏற்றுக்கொள்பவளும்
உலகின் முதல் பெண்ணாய்
பைபிள் சொல்பவளுமாகிய
ஏவாளின் காலத்திற்கு முன்பும்
அதன் நிலவுகை பற்றி
பேசலாம்...

இதயங்கள் தோன்றியபோதே
பேசத்தெரிந்திருந்தது
அவற்றிற்கு....

மருத்துவிச்சியின் கிள்ளலில்
முதல் மூச்சு விடும்
புதுப் பூவிற்குத் தெரிந்த
தாயின் குரலாய்....,
தாயிற்கு மட்டும் புரியும்
கிள்ளை மொழியாய்....,
தனித்துவங்களோடு
பயணிக்கிறது,
இதய பாசை....!

பழக்குவிக்கப்பட்ட புறாக்களின்
இறக்கைகளின் துடிப்பிலும்
பழமையான
காகித மடிப்புகளிலுமான
நிலவுகைகள் மறைந்து,
பின்பு....

சட்டைப்பைக்குள்
சிணுங்கிச்சிரிக்கும்
குறுந்தகவலாய்....,
இணையத்தில்
இறக்கை கட்டிய
வார்த்தைச் சரமாய்.........

எல்லாமும்
செயலிழந்து போன;
மறுக்கப்பட்ட தேசத்திலிருந்து......,
கடல்களும்
கடும் காவல்களும்
கடந்து பரவும்.....,
கோடிக்கணக்கான
சுவாசங்களுக்குள்,
உனது நாசிக்கு மட்டும்
சொந்தமானதை
வகை பிரித்தறியும்
பிரயத்தனத்தில்
எனது இதய பாசை.......!

6 comments:

Anonymous said...

Our Dear Young Poetist,
The words in your poem it tells something. But those are true!
carry on! and All the very best.

வேல் சாரங்கன் said...

நன்றி அறிமுகம் இல்லாத வாசகி....!

தலைக்கு மேல் அழுத்தும் கல்விச்சுமை, இந்த பகுதியில் இடும் கவிதைகளின் தரம் தொடர்பாக நான் கைக்கொள்ளும் தேர்வு, அதிகமாய் எழுத முடியாமை என எல்லாமும் சேர்ந்ததில் நீண்ட நாள் இடைவெளிகளில் கவிதைகள்....
இருந்த ஒரு சில வாசகர்களையும் தொலைத்து விட்டேனோ என்ற பயத்தை ஓரளவு போக்கியிருக்கிறது வாசகியின் விமர்சனம்... அவசரத்தில் ஆங்கிலத்தில்.... நன்றி!

"The words in your poem it tells something. But those are true!"

Ahh... it is true for many people. Not properly fitting to me!

Anonymous said...

Hello. This post is likeable, and your blog is very interesting, congratulations :-). I will add in my blogroll =). If possible gives a last there on my blog, it is about the Câmera Digital, I hope you enjoy. The address is http://camera-fotografica-digital.blogspot.com. A hug.

வேல் சாரங்கன் said...

Thank you Câmera Digital....
I will go through you site...

Nisha said...

Nice poem all the very best..

வேல் சாரங்கன் said...

Thank you Nisha