Tuesday, January 20, 2009

எது வரை இது நீளும்...?


மனிதங்கள்
மரணித்து விட்ட
மண்ணில்
கவிதைகளுக்கு என்ன
கடமை....?

கவிஞர்களே...!
கடதாசிகளைக் கொடுங்கள்...
முடிந்தால் இவர்களின்
வயிற்றை நிரப்பட்டும்...
இல்லையேல்,
கண்ணீரையாவது
துடைக்கட்டும்....!

மூடி திறக்கப்பட்ட
பேனாக்களைக் கொடுங்கள்...!
எதற்கும்
கை காவலாய்
சட்டைப்பையில் இருக்கட்டும்...
அதுவாவது....!!

5 comments:

கிருஷ்ணபிள்ளை குருபரன் said...

ம்
தெய்வங்கள் காத்தற்றொழிலைக் கைவிடும்போது
தெய்வங்கள் மீதும் கல்லெறிய வரும்.

எங்களுக்காக நாங்கள் மட்டும்

வேல் சாரங்கன் said...

ம்... என்ன செய்வது... இந்த மன நிலைக்கு இப்போது நிறைய பேர் மாறி விட்டார்கள்...
கால நீட்சியின் பக்க விளைவு இது என்று எண்ணத்தோன்றுகிறது... வரவுக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி. !

Paul said...

"மூடி திறக்கப்பட்ட
பேனாக்களைக் கொடுங்கள்...!
எதற்கும்
கை காவலாய்
சட்டைப்பையில் இருக்கட்டும்...
அதுவாவது....!!"

நல்லா வரிகள்...

Thejo said...
This comment has been removed by the author.
Thejo said...

தமிழிஷ் போன்ற திரட்டிகளில் சமர்ப்பிக்கலாமே அண்ணா பதிவுகளை, அதிகளவு ஆட்களை சென்றடையும் உங்கள் ஆக்கங்கள்?