Saturday, September 1, 2007

தேசமும் கவிதையும்


அன்றோர் தினத்தின்
கதிரவன் எழ முன் - ஒரு
கதிரவன் விழுத்தப்பட்டான்...
மேற்கில் அல்ல...;
வீட்டு வாசலில்...!

பல்லாயிரம் தடவைகள்
நான் கடந்து சென்ற வாசல்
பல நூறு த்டவைகள் தரித்து,
சல்லாபித்த மாலைப்பொழுதுகள்....

நம் கதைகளினைக் கேட்டு
மெளனமாய் சிரித்த மதகு...
எங்கள் இருப்பில்
அது மலர்ந்தது...;
எங்கள் தரிப்பில்
அது தலை நிமிர்ந்தது....

கடந்து தான் போயிற்று,காலம்
கைகளில் பிடிபடாமல்,
நழுவி விழுந்து
நெடு தூரம் போகிறது...!

நேற்றுப்போல் இருக்கிறது
நினைவுகளின் ஈரம்
நெருடல் நிறைந்த
நெஞ்ச வெளிகளில்
வேர் எறிந்து,
நினைவுகள் மட்டும்
முளைத்துக்கொண்டே
இருக்கின்றன....!
செத்துக்கொண்டேயிருக்கிறது
நிஜம்...!!

'சந்திப்போம்' சொல்லி
பிரிந்த பொழுதொன்றில்
சிந்திக்கவே இல்லை;
சந்திக்கவே முடியாத
தலைவிதி பற்றி...!

என் இதயம் பூத்த
தெருவில்,
என் கனவுகள்
கருக்கொண்ட பொழுதில்..,
என்னோடு இருந்தாய் அருகில்.... !

அதே தெருவில்
நீ சுமக்கப்படுகையில்,
நான் நடக்கிறேன் அருகில்.... !!

அன்றோர் பொழுதில்
கதிரவன் ஒருவன்,
கடிதம் சாட்சியாய்
கடவை தான்டினான்...!
இன்னும் பல சூரியன்கள்
வெளியேறிப்போயின... !!

இன்றோர் கதிரவன்
இல்லம் முன்பே
விழுத்தப்பட்டான்...!

இதோ...
கையாலாகாத ஒருவன்
எழுதிக்கொண்டே இருக்கிறான்
கவிதை....
வேறென்ன சொல்ல...?
இயலாமை தானே
இப்படிப் பூக்கிறது....!!

10 comments:

கோவையூரான் said...

'சந்திப்போம்' சொல்லி
பிரிந்த பொழுதொன்றில்
சிந்திக்கவே இல்லை;
சந்திக்கவே முடியாத
தலைவிதி பற்றி...!


உண்மை தோழா!
நான் கூட உணரவில்லை.
அது தான் கடைசி சந்திப்பென்று.
கடைசியாக ஒன்றரை வருடங்களின் முன்னர் அவனது வீட்டில்தான் அந்த இறுதி சந்திப்பு இடம்பெற்றது.

அதே தெருவில்
நீ சுமக்கப்படுகையில்,
நான் நடக்கிறேன் அருகில்.... !!


அருகில் நடக்கும் பாக்கியம் கூட எனக்கு கிடைக்கவில்லையே.

Anonymous said...

I love ur poems. They are very emotional. Get them translated into English!

Lapa said...

Conhecem um dos melhores escritores da literaturalusófona?

CRSTÓVÃO DE AGUIAR?

Conheçam-no, no meu Blog.

Obrigado.

வேல் சாரங்கன் said...

உங்கள் வருகைக்கும் விமர்சனத்திற்கும் நன்றி கோவையூரான்...
மற்றும் பெயர் தெரியாத, முகம் தெரியாத...,
ஓ மொழி கூட புரியாத ( என் மொழி எப்படி புரிந்தது Lapa? I don't understand.. what language is this?)அனைத்து அன்பு வாசகர்களுக்கும் விமர்சகர்களுக்கும் என் நன்றிகள்...!


Dear Annony...

hopefully in future.....
thanks.

sukan said...

இதோ...
கையாலாகாத ஒருவன்
எழுதிக்கொண்டே இருக்கிறான்
கவிதை....
வேறென்ன சொல்ல...?
இயலாமை தானே
இப்படிப் பூக்கிறது....!!

நீங்கள் வெளிப்படுத்தும் உயிர்துடிப்புள்ள வரிகளை பார்த்து எனது உணர்வுகளும் துடிக்கின்றது.

Anonymous said...

Hi, glad that u took my comment seriously, was telling one of my non-tamil friends abt ur poem, she said she would love to read them if they could be translated into English, and it would promote inter ethnic harmony, what do u think?

வேல் சாரங்கன் said...

Dear "Anonymous"(?)
I will be proud and Happy if my poems can contribute atleast a bit to make inter ethnic Harmony like you say....

and i can consider favourably to give the power to anyone who is willing to translate my poems in English without polluting its theme.
Unfortunately I am unable to do that myself right now..
and another thing, most of these poems are never published anywhere earlier and i have no idea to publish a book in recent future due to the prevalent situation, as most of my poems are related to politics directly or indirectly.

hopefully in future...

thank you.

Anonymous said...

Thanks for responding. I am currently doing my third year at the Faculty of Law, University of Colombo.I think u know someone else here?
I understand the constraints that u will face especially bcos of the subject matter of ur poems!!!
Hopefully there will be a change for the better in the future!

Anonymous said...

really fantastic dear.iam really proud of u.U had meet him.but even i had no chance to meet him.i hope god will change this bleedy fate of tamils.we will win.i pray

Anonymous said...

What would i say dear?.........I too feel what you feel..