Thursday, May 10, 2007

'காக்கை வன்னியர்...'

தெருவோரமாக
இருவர் ஆயுதங்களோடு....
முருகப்பன்
அருகில் வந்து
மெதுவாய் சொன்னான்...

"பின்னுக்கு
நாலைந்து பேர்
நிக்கினம்...
பெரும்பாலும்
பெட்டையள்...."

ஆபத்தை
உணர முன்பே
பிடிக்கப்பட்டு
திமிறத் திமிற.....

முருகப்பன்சிரிக்கிறான்...
ஏற்றிக்கொண்டு
வண்டிபுறப்பட்டது...

வாரிசுகள்....,
குரைத்துக்கொன்டுவெளிவந்தன...!!

முருகப்பன்
மூக்கை சுழித்தான்...!
'இதுகள் இனி
வளரத்தான் போகுது...'!!!

1 comment:

Nisha Nathan said...

ஏன் உங்கள் கவிதை க்கு காக்கை வன்னியன் எனும் தலைப்பு இட்டீர்கள்? "பின்னால் நிற்பது பெரும்பாலும் பெடையள்" இவ் வரிகளின் ஆழம் வெளிப்படையாக புரியவில்லை. எனினும் உங்கள் இலக்கிய பணி மேலும் மேலும் வளம் பெறட்டும் வாழ்த்துக்கள் இளம் கவிஞர் வேல் சாரங்கன்!